தின அஞ்சல் என்பது 2015 ஆம் ஆண்டு ஒரு தினசரி செய்தித் தாளாக துவங்கப்பட்டது. அதன் ஆரம்ப காலத்திலிருந்து செய்தியை நேர்மையாகவும் சமூக பொறுப்புடன் பகிரும் ஊடகமாக விளங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு, டிஜிட்டல் உலகத்தின் வளர்ச்சியை உணர்ந்து, தின அஞ்சல் தனது இணையதள பதிப்பையும் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் எளிதாக இணையத்தில் செய்திகள் அணுகும் வாய்ப்பு பெற்றனர்.
இந்த ஊடகத்தின் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளராக மோ.உதயசிங் அவர்கள் செயல்பட்டு வருகிறார். செய்தித்துறையில் புதுமைகளை கொண்டு வரும் ஆவலும், சமூகத்திற்கு நன்மை பயக்கும் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இவருக்கு உள்ளது.
மோ.உதயசிங் அவர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து பல சவால்களை கடந்து, ஊடக உலகில் தன்னை நிலைநாட்டியவர். அவரின் விடாமுயற்சி, நேர்மையும், சமூகத்தின் மீது கொண்ட அக்கறையும் தான் தின அஞ்சல் ஊடகத்தின் இன்றைய நிலைக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
இணைய ஊடகத்தில் நம்பகமான மற்றும் நேர்மையான செய்தியை வழங்குவதே எங்கள் முக்கியக் குறிக்கோள். வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவசியமான செய்திகளை விரைந்து பகிர்வதில்தான் தின அஞ்சல் தனது வெற்றியின் ரகசியத்தை கண்டுள்ளது.