சென்னை: ” வட்டச்செயலாளருடன் பேசியதற்கு என்னை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை,” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச்செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.