இந்த 2 டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுகள் கண்டிப்பாக அடுத்தாண்டு நடைபெறும் : நிச்சயம் தொடர்ந்து படியுங்கள்..!

அரசு வேலையை கனவாகக் கொண்ட பல இளைஞர்கள் இருக்கிறார்கள். 2,3 தேர்வுகளில் தொடங்கி 10 தேர்வுகளில் தோல்விகள் அடைந்தாலும், என்றாவது ஒருநாள் அரசு வேலையை வாங்கி விடுவோம் என்ற கனவில் அவர்கள் விடாப்படியாக படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

புதிய தகவல்:-

அவர்களுக்கு எல்லாம் அடுத்தாண்டு (2026) கவனம் செலுத்த வேண்டிய டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்தான ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது குரூப் 2/2A ; குரூப் 4 ஆகிய இந்த இரண்டு தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தி படித்தால் போதும் அடுத்த ஆண்டு நிச்சியம் நீங்கள் அரசுப் பணியாளராக அல்லது அரசு அதிகாரியாக வரலாம்.

குரூப் 4, குரூப் 2/2A

சரியாக 2 மாதங்களுக்கு அப்புறம் டிஎன்பிஎஸ்சி (TNPSC) சார்பில் அரசுத் தேர்வுகளுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும். டிசம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் அது வெளியிடப்படும். அதில் நிச்சயம் குரூப் 4, குரூப் 2/2A தேர்வுகளுக்கான அறிவிப்பு அதிகபட்சமாக எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக அரசுப்பணியை எதிர்நோக்கி இருப்பவர்கள் இப்போது இருந்தே இந்த தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினால், அடுத்த ஆண்டு நிச்சியம் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு செல்லலாம்.

இதில் சோகம் என்னவென்றால் அடுத்த ஆண்டு குரூப் 2/2A; குரூப் 4 தேர்வுகளுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை இந்தாண்டை விட, மிக குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *