கரூர் விவகாரத்தில் தவெக மீது ஒருசில தவறுகள் உள்ளது. அதற்காக விஜய்யை குற்றவாளியாக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில்,” கரூர் விவகாரத்தில் நீதியரசர்களை விமர்சிப்பது துரதிஷ்டவசமான விஷயம் தான். நீதியரசர்கள் பற்றி எப்போதும் நாங்கள் குறை சொல்ல மாட்டோம். தமிழக முதலமைச்சர் மட்டும்தான், மத்திய அரசை எதிரியாக பார்க்கிறார். தொடர்ந்து ஆளுநரை அவர் சீண்டி பார்ப்பது சரியல்ல. ஆளுநர் கேட்கும் கேள்வி சரியானதுதான். ஆளுங்கட்சி அனைத்தையும் அனுசரித்துப் போக வேண்டும்.
கரூர் விவகாரத்த்தில் விஜய் மீது வழக்கு போட்டால் நிற்காது. இதுஅல்லு அர்ஜுன் வழக்கு. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்யலாம். தவெக, விஜய்க்கு அடைக்கலம் கொடுக்க, பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தவெக மீது ஒருசில தவறுகள் உள்ளது. அதற்காக விஜய்யை குற்றவாளியாக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் நியாயத்தை நியாயமாக பேசுகிறோம்” என்றார்.
