பிக் பாஸ் செட்டை இழுத்து மூடுங்கள்- மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு

பிக் பாஸ் செட்டில் கழிவுநீர் அகற்றும் மேலாண்மை தொடர்பான விதிமீறல் நடைபெற்றதையொட்டி பிக் பாஸ் செட்டை இழுத்து மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது 9வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி தொடங்கியது. தமிழ் பிக் பாஸ் போல கன்னடம் மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை மூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிக் பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் பிக் பாஸ் செட்டை இழுத்து மூட வேண்டும் என்று இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்துள்ளார். இதனால் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 இத்துடன் முடிவுக்கு வரும் என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *