ரஜினியின் முன்னாள் மருமகன் தனுஷ் நடிகையுடன் இரகசிய காதல் – விரைவில் திருமணம் என கிசுகிசு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான நடிகர் தனுஷ், மிருணாள் தாக்கூர் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி, சினிமா வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மிருணாள் தாக்கூர்

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘சீதா ராமம்’ என்ற படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு, ‘ஹாய் நன்னா’, ‘பேமிலி ஸ்டார்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக உள்ளார்.

ஆரம்பத்தில், குடும்ப-பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாக்கூர், அதன்பிறகு பிறகு படுகவர்ச்சியான கதாப்பாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

தனுஷ் – மிருணாள் தாக்கூர் காதல்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனுஷ், மிருணாள் தாக்கூர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட போட்டோ மற்றும் வீடியோ வெளியானது. இதனை வைத்து இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து நட்சத்திர ஓட்டலிலின் ஒரு பகுதியில் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீர் இரகசிய திருமணம்..?

இந்நிலையில், தனுஷ், மிருணாள் தாக்கூர் திருமணம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் நடைபெற உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் இது குறித்து மறுப்போ! அல்லது உறுதி படுத்தவோ! இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் கேரியரை பாதிக்கும்

நடிகர் தனுஷூக்கு 19 மற்றும் 15 வயதில் இரண்டு பையன்கள் உள்ளனர். நடிகர் தனுஷ் பல நடிகைகளுடன் தொடரபில் இருந்ததாக பல்வேறு கிசு..கிசுக்கள் பரவியது. தற்போது நடிகை மிருணாள் தாக்கூர் உடன் கிசு..கிசு வெளியாகி உள்ளது தனுஷின் சினிமா கேரியரை பாதிக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *