நடிகர் அபிநய்க்கு உதவிக்கரம் நீட்டிய தனுஷ்!

கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபினய்க்கு நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபினய்(44). இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் அறிமுகமாகியிருந்தார்  இதன்பின் ஜங்ஷன், சிங்கார சென்னை, பொன்மேகலை ஆகிய படங்களில் கதாநாயனாக நடித்த அபினய்,  பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தார். அத்துடன் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி வந்தார். இதன்பின் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அபினய் போதிய வருமானம் இல்லாததால் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில வருடத்திற்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

தற்போது அவர் கல்லீரல் தொடர்பான பிரச்னையால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட அபினய் சிகிச்சை செலவை கூட சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலர் அவருக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் ரூ.5 லட்சத்தை நிதி உதவியாக நடிகர் அபினய்க்கு வழங்கியுள்ளார். ஏற்கெனவே கேபிஒய் பாலா, ரூ.1 லட்சம் நிதி உதவியாக அபினய்க்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *