‘ஜனநாயகன்’ படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்த வீரமான விஜய் ரசிகை

விஜய்யின் தீவிர ரசிகையான, ஐஸ்வர்யா மதன் என்னும் பெண் ‘ஜனநாயகன்’ படம் நல்லபடியாக வெளியாக வேண்டி சென்னை அனகாபுத்தூரில் உள்ள அயோத்தி அம்மன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

தீவிர விஜய் ரசிகை

சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா மதன். இவர், சிறு வயது முதலே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்று சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்யா, தனது வலது கையில் விஜய்யின் புகைப்படத்தை ‘டாட்டூ’ ஆக வரைந்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக மாறிய பிறகு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணியில் செயல்பட்டு வருகிறார்.

மொட்டை அடித்த விஜய் ரசிகை

கட்சிப் பணியில் ஈடுபட்டு வரும், ஐஸ்வர்யா மதன், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால், அந்த படம் நல்லபடியாக வெளியாக வேண்டி அனகாபுத்தூரில் உள்ள அயோத்தி அம்மன் கோவிலில் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

தான் நேத்திக்கடன் செய்த குறித்து பேசிய ஐஸ்வர்யா மதன், “ஜனநாயகன் வெளியிடாமல் இருப்பதற்கு, ஆளும் அரசு தான் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விஜய் படம் வெளியாவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயார்” என்றும் கூறி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *