வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கடும் குளிர்காற்று வீசுகிறது. மேலும், சில மாவட்டங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்பபு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.
சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதேபோல் குளிரும் சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
கடும் குளிரில் சென்னை வாசிகள்
சென்னையில் இன்று, நேற்றில் இருந்து வானிலை நிலவரம் தலை கீழாக மாறியுள்ளது. கொடைக்கானல், ஊட்டியை போன்று சென்னை வானிலை நிலவரம் அளவிற்கு குளிர் காணப்படுகிறது.
-டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் தூறல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த மழையால் குளிர் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. நாளையும் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
