2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் அறிக்கை – செயலி
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தொடக்கம்
தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் இணையதளத்தை (Manifesto Portal 2026) தொடங்கி வைத்தார்.
இக்குழுவிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகிக்கிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் “மக்களின் அறிக்கையாக” இது இருக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது.

கூட்டணி பஞ்சாயத்துக்கள்
தமிழகத்தில், கூட்டணி குறித்த சலசலப்புகள் மறுபுறம், காங்கிரஸ் கட்சி திமுகவிடம் வரவிருக்கும் தேர்தலில் 38 இடங்களையும், அமைச்சரவையில் 3 இடங்களையும் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், காங்கிரஸின் சில தலைவர்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி குறித்துப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
