பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் இருந்து ரெட் கார்டு (Red Card) பெற்று வெளியேறிய விஜே பார்வதியின் பிக் பாஸ் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என அல்லது அண்ணன்
வெளியேற்றத்திற்கான காரணம்
”டிக்கெட் டு பினாலே” (Ticket to Finale) கார் டாஸ்க்கின் போது, சக போட்டியாளர் சாண்ட்ராவை அநாகரிகமான முறையில் கார் கதவை திறந்து எட்டி உதைத்து வெளியேற்றியதற்காக பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவருக்கும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.
சாண்ட்ராவிற்கு இதனால் ‘பேனிக் அட்டாக்’ (Panic Attack) ஏற்பட்டதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
ரெட் கார்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
பிக் பாஸ் விதிமுறைப்படி ரெட் கார்டு வாங்கி வெளியேறுபவர்களுக்குப் பல சலுகைகள் மறுக்கப்படும்:
சம்பளம் கிடையாது: பொதுவாக ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்படுபவர்களுக்கு அவர்கள் தங்கியிருந்த நாட்களுக்கான ஊதியம் (Salary) வழங்கப்படாது என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாது: சீசன் 9-ன் இறுதிப் போட்டியில் மற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்வது போல பார்வதியால் கலந்து கொள்ள முடியாது.
மறுசந்திப்பு கிடையாது : பிக் பாஸ் வீட்டின் ரீயூனியன் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம்.
பார்வதிக்கு என்னாச்சு?
சர்ச்சைக்குரிய பதிவுகள்: வெளியே வந்த பிறகு பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Show Runner is Shame” மற்றும் “ஜோக்கர்கள் தற்போது மனிதர்கள்” என்பது போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். இது தொகுப்பாளர் விஜய் சேதுபதி மற்றும் நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்களுக்கு எதிரான விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது தாயுடன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களில் விஜே பாரு பொலிவிழந்து காணப்படுகிறார்.
