தேர்தல் பணியைத் தொடங்கிய தவெக : 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழு அறிவிப்பு!

10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவை தமிழக வெற்றிக் கழகம் அமைந்துள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள முன்னணி கட்சிகள் பிரச்சார குழு, தேர்தல் அறிக்கை குழு என தனித்தனியாக குழு அமைத்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

அந்தவகையில், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, முறையில், தேர்தல் பிரசாரக் குழுவை தமிழகம் வெற்றிக் கழகம் அமர்ந்துள்ளது.

தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

1. திரு. N.ஆனந்த்

2. திரு. ஆதவ் அர்ஜுனா B.A.

3. திரு. K.A.செங்கோட்டையன்

4. திரு. A.பார்த்திபன்

5. திரு. B.ராஜ்குமார் DME

6. திரு. K.V.விஜய் தாமு

7. திரு. S.P.செல்வம் DCE

8. திருமதி பிச்சைரத்தினம் கரிகாலன்

9. திரு. M.செரவு மைதின் (எ) நியாஸ்

10. திருமதி J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.

மேற்கண்ட இக்குழுவில் உள்ள 10 பேரும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள் என்று தவெக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவிற்குக் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தவெக கட்சித் தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *