சென்னை மெரினா கடற்கரை அருகில் முதல்வர் திடீர் ஆய்வு : செல்ஃபி எடுத்துக்கொண்ட பொதுமக்கள்

சென்னை மெரினா கடற்கரை அருகில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை  முதல்வரும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

முதல்வர் முக.ஸ்டாலின பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதைதொடர்ந்து, சென்னை – நேதாஜி சாலை, நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அவர்கள் வசிப்பதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்தமைக்காக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து, அங்கு வசித்துவரும் திரு.துரை- சுமதி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு “வெற்றி” என்று பெயர் சூட்டினார்.

மேலும், சென்னை – 3வது கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி, அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து, அவர்கள் வசிப்பதற்கு வீடு ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *