பொங்கல் நாளில் கூட்டணியில் உள்ள திமுக கட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “தை பிறந்தால் வழி பிறக்கும்… ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய ஒரு மாடல். கேரளாவின் UDF மாடல். கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதையை காட்டுகிறது. இதற்கு காங்கிரஸ் தலைமையேற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது.
நட்பு +பங்கு. இதுவே UDF அரசியலின் அடித்தளம் என்றும், UDF-ல் நாங்கள் தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்கிறோம். பரஸ்பர நம்பிக்கையும், ஒரே அரசியல் நோக்கமும் அவர்களின் பலம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கு “பை-பை” சொல்லுவதில்லை. தேர்தலில் கூட்டாளிகள், ஆட்சியிலும் பங்கு பெறும் கூட்டாளிகளே. அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும்
பலத்தையும், உடன்பாட்டையும், பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுகிறது.
ஆட்சி ஆதிக்கத்திற்காக அல்ல” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“UDF மாடல் = கூட்டணி தர்மம் செயல்பாட்டில்.
ஒன்றாகப் போராடு.
ஒன்றாக ஆட்சி செய்.
ஒன்றாக மக்களுக்கு வழங்கு.
இந்த ஜனநாயகமான UDF மாடல் 2026-லும் வெற்றி பெற வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்..
நல்ல ஆட்சியாக மாறட்டும்.
#ஆட்சியில்பங்கு
#தைபிறந்தால்வழிபிறக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மறைமுகமாக திமுக கூட்டணி விமர்சித்து என்கிட்ட பேசி உள்ளார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சியில் பண்ண பங்கேற்பதாகவும் பேசப்படுவது சட்டியை ஏற்படுத்தி உள்ளது
