பொங்கல் பண்டிகை : முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் போது மக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து  சூரிய பகவானை வணங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நாளில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவார்கள்.

பொங்கல் பண்டிகை முட்டிட்டு தமிழகத்தை பல்வேறு அரசியலுக்கு கட்சித் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் பொங்கல் வாழ்த்து

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன். தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும்! #வெல்வோம்_ஒன்றாக!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *