தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள சுந்தரப்பெருமாள்கோவில் சன்னிதி தெருவில் வசிப்பவா் விஜய். இவர் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளியியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இப்பள்ளி 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர் விஜய் அடிக்கடி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியதை அடித்து, இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அப்புகாரின்பேரில் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் உஷா வழக்குப் பதிந்து ஆசிரியா் விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
சமீப காலமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
