அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ” முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். அதற்கு. நாங்கள் கட்டுப்படுவோம்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவர் முடிவை அவர் சொல்லிவிட்டார். எங்களது முடிவு பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுதான்” என்று கூறினார்.