ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 4.9, 5.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் தொடர்ச்சியாக மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கங்கள் தலைநகர் காபூலுக்கு அருகே 160 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளன.
இதன் மூலம், நேற்று நள்ளிரவு முறையே 5.8 மற்றும் 4.1 ரிக்டர் அளவுகளில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட மொத்த நிலநடுக்கங்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 2,205 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.