கீவ்: கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்த போர் தொடர்கிறது. ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல், உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.