போரை விரும்பவில்லை; வளர்ச்சியை விரும்புகிறோம்; பிரேசிலில் சசி தரூர் பேச்சு

பிரேசில்: ‘‘நாங்கள் போரை விரும்பவில்லை. வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என பிரேசிலில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பேசுகையில் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் ‘ நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. சசி தரூர் தலைமையிலான குழு பிரேசிலுக்கு சென்றுள்ளது.

பிரேசிலில் பார்லிமென்ட் உறுப்பினர்களை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் சந்தித்து பேசினார். பின்னர் சசி தரூர் பேசியதாவது:

அமெரிக்க அதிபர் பதவியின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு, அந்த மரியாதையை மனதில் கொண்டுதான் நாங்கள் பேசுவோம். பாகிஸ்தான் உடன் மோதலை நிறுத்தும் படி, யாரும் எங்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஏற்கனவே நிறுத்தச் சொல்லியிருந்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *