வாஷிங்டன்; இந்திய பயணம் வாழ்நாளில் சிறந்தது, பிரதமர் மோடியுடான சந்திப்பு சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மனைவி உஷா வான்ஸ் பூரிப்புடன் கூறி உள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பவர் ஜே.டி. வான்ஸ். இவரின் மனைவி உஷா வான்ஸ். இவரை அமெரிக்காவின் செகண்ட் லேடி என்று அழைக்கின்றனர். இவரின் பூர்வீகம் ஆந்திரா. 1970களில் அமெரிக்காவிக்கு இவர்களின் குடும்பம் புலம்பெயர்ந்தது.
ஏப்ரல் மாதம் ஜே.டி. வான்ஸ், தமது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்திருந்தார். அந்த சுற்றுப்பயணம் குறித்தும், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்தும் உஷா வான்ஸ், அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.