வாஷிங்டன்: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க துவங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதிக்க, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியது.