இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது: சிஐடி அதிகாரிகள் அதிரடி!

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. இவரது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு தனது மனைவிக்கான முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ரணில் லண்டனுக்குச் சென்றார்.

இந்த நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தனது பயணத்திற்கான செலவுகளை தானே ஏற்றுக் கொண்டதாக ரணில் கூறினார். ஆனால், குற்றப்புலனாய்வுத்துறை (Criminal Investigation Department) அதிகாரிகள், ரணில் விக்ரமசிங்க தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரசு பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.

இந்த புகார் தொடர்பிலான விசாரணைக்கு ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ரணிலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ரணிலின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணிலின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரோரா ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ஏற்கெனவே வாக்குமூலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *