இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிச்சை எடுக்காது. இருப்பினும் இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளிலும் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஜம்மு- காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்னைகளிலும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்தியாவுடனான மோதலில் வான் மற்றும் நிலத்திலும் பாகிஸ்தான் தங்கள் வலிமையை நிரூபித்தது. மேலும், தங்கள் மீதான எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் முழுமையான பதிலளிக்கப்படும் என்று எச்சரித்தது. கடல்வழியாகக்கூட இந்தியாவுக்கு முழு பலத்துடன் பதிலடி தர பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றார். இஷாக் தாரின் அழைப்பு பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.