தலைநகர் டில்லியில், ‘காற்று மாசுபாட்டைக் குறைக்கும் திட்டம் – 2025’ முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, ரேகா பேசியதாவது:
மெட்ரோ ரயில் பயணியர் வசதிக்காக, 2,300 மின்சார ஆட்டோக்கள் ரயில் நிலைய வாயிலில் நிறுத்தப்படும். மாநகர் முழுதும் கண்டறியப்பட்டுள்ள மாசு நிறைந்த 13 இடங்களில் தண்ணீர் தெளிப்பான் நிறுவப்படும்.
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான டில்லி மாநகரை உருவாக்குவதே பா.ஜ., அரசின் கனவு. காற்று மாசுபாடு தான் மக்களின் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
மேலும், ‘சுத்த ஹவா சப்கா அதிகார் பிரதுஷன் பர் ஜோர்தார் பிரஹார்’ என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்கும் மாநகர் முழுதும், 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதற்காக, ‘ஏக் பெட் மா கே நாம்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும்.