ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடத்திய இந்தியா, தற்போது ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாத தாக்குதல் நடந்தது இதற்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டது. பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. மே 7-ம் தேதி தொடங்கிய இந்தத் தாக்குதல் மே 10-ம் தேதி வரை தொடர்ந்தது. இரு நாடுகளும் பேசி, மே 10-ம் தேதி இந்தத் தாக்குதலை இறுதிக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் இன்று சுட்டுக்கொன்றுள்ளனர். இது தொடர்பாக
இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஆபரேஷன் மகாதேவ். லிட்வாஸின் பொது பகுதியில் ஆபரேஷன் தொடர்ந்து வருகிறது” என்று முதலில் பதிவிட்டிருந்தது. அடுத்த பதிவில், ‘தீவிர சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்னும் ஆபரேசன் தொடர்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.