பெரோசாபாத்:உத்தர பிரதேசத்தின் பெரோசாபாத் அருகே, கிரிக்கெட் விளையாட்டின் போது, மார்பில் பந்து பட்டதில், 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உ.பி.,யின் காதி ராஞ்சோர் என்ற இடம், நர்கி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன், அன்ஷ் என்பவர், அருகில் உள்ள, துண்ட்லா நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்றார்.