புதுடில்லி:தான் குடியிருக்கும் வீட்டிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் கட்டப்படும் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்த வழக்கில், வழக்கு தொடர்ந்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டில்லி வசந்த் விஹார் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், அங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள மெஹ்ராலி என்ற இடத்தில் கட்டப்படும் கட்டடம் ஒன்றை சட்ட விரோதமாக அறிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த பணத்தை டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல அறக்கட்டளைக்கு வழங்க உத்தரவிட்டது.