புதுடில்லி,:டில்லி அரசின் ஒப்பந்தங்கள் தொடர்பான விதிமுறைகளில், நடுவர் மன்றம் என்ற வார்த்தையை, பொதுப்பணித்துறை நீக்கியுள்ளது.
சமீப காலமாக, டில்லி பொதுப்பணித்துறைக்கும், அதன் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஏராளமான வழக்குகள் நடுவர் மன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மூன்றாவது நபர் தலையீட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், மாநில அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
எனவே, டில்லி அரசின் ஒப்பந்தங்கள் தொடர்பான விதிமுறைகளில், நடுவர் மன்றம் என்ற வார்த்தையே நீக்கப்பட்டுள்ளது. இனிமேல், பொதுப்பணித்துறைக்கும், அதன் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த வழக்கு, நீதிமன்றத்திற்கே செல்லும்; நடுவர் மன்றம் விசாரித்து உத்தரவிடாது.