புதுடில்லி: அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்து கட்சிகளுடன் பேச வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகிக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றினார். கடந்த மார்ச் 14ல், டில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்ட போது, எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ‘இந்த பணத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என, நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறினார்.