மும்பையில் பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவசேனா கட்சி தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கில் உள்ள ஆண்கள் பொதுக்கழிப்பறையில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சிவசேனா (யுடிபி) கட்சியின் உள்ளூர் தலைவரின் மகன், 16 வயது சிறுமியை பாந்த்ரா கிழக்கில் உள்ள பொது கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று அவர் சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்தபுகாரின் பேரில், நிர்மல் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை கழிப்பறையில் வைத்து சிவசேனா கட்சி தலைவரின் 20 வயது மகன் பலாத்காரம் செய்தது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிர்மல் நகர் போலீஸார், சிவசேனா தலைவர் மகனை கைது செய்து மஸ்கானில் உள்ள நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
