சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 110 ரூபாய் உயர்ந்ததால் 11,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து 11,060 ரூபாய்க்கு தங்கம் விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்கள், போர் பதற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலகளாவிய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாதத் தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று (அக்டோபர் 6) ஒரு கிராம் ஆபரண தங்கம் 110 ரூபாய் உயர்ந்து .11,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 880 ரூபாய் உயர்ந்து 88,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று (அக்டோபர் 6) ஒரு கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து 166 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
