கல்வித் தொலைக்காட்சியில் அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் புதியதாக தொடங்கப்பட்டு உள்ளன.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இவை நடத்தப்படுகிறது.
அரசுப் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரதிக்கேயமாக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், பாடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை ஆசிரியர்கள் கற்பித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இதற்கென்ன தனி இணையதளத்தையும்; யூடிப் சேனலையும் தொடங்கியுள்ளது.

கீழ்க்கண்ட போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடத்தப்படுகிறது.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
- ஆசிரியர் தேர்வு வாரியம்
- பணியாளர் தேர்வாணையம்
- இரயில்வே தேர்வு வாரியம்
- வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம்

இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment என்ற Youtube சேனலிலும் காணலாம்.
கால அட்டவணை : 06.09.2025 – 10.10.2025
கல்வி டிவியில் ஒளிபரப்பாகும்
நேரம்: காலை 7 மணி முதல் 9 மணி வரை
மறுஒளிபரப்பு நேரம் :- மாலை 7 மணி முதல் 9 மணி வரை

https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில்
அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை (PDF) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
