குரூப் 2, குரூப் 2A முதல்நிலை தேர்வு வினாக்களுக்கான உத்தேச விடைகள் வெளியாகி உள்ளன.
குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் விண்ணப்பித்தவர்களில் சுமார் 25% தேர்வர்கள் தேர்வை எழுத வரவில்லை.
விடைகள் தவறாக இருந்தால்?
தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தேச விடைகள் 7 நாட்களுக்குள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்துள்ளது. தமிழ்/ ஆங்கிலம், பொது அறிவு, கணிதம் என மொத்தம் 200 வினாக்கள். இதில் ஏதேனும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் நாம் மின்னஞ்சல் முகவரி மூலம் டிஎன்பிஎஸ்சி தரப்புக்கு உரிய விளக்கத்துடன் நாம் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் தரப்பில் தவறாக இருக்கும் பட்சத்தில் விடைகளை மாற்றும் செய்யலாம்
காலிப் பணியாளர்களின் எண்ணிக்கை :-
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்களும்,
முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள்…
மேலும், குரூப் 2,2A முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு நடைபெறும் எனவும்; இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
