திருவண்ணாமலை அருகே காவலர்கள் இருவர், இளம் பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் யாராவது தவறு செய்தால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என்று சமீபத்தில், தமிழக அரசு சட்டம் இயற்றிய பிறகும் இதுபோன்ற காவலர்கள் நடந்து கொள்வது பெரும் கண்டனத்திற்குரியது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
காவலர்கள் செய்த பாலியல் குற்றம்:-
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தன் அம்மாவுடன் காய்கறிகள் ஏற்றப்பட்ட வண்டியில் திருவண்ணாமலை காய்கறிச் சந்தைக்கு வந்துள்ளார்.
ஊருக்குத் திரும்பும் வழியில் திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் கிராமத்தின் அருகே திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இப்போது அவ்வழியாக காய்கறி வண்டியில் வந்த அந்த ஆந்திர மாநில இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வண்டியில் இருந்து கீழே இறக்கியதுடன், அருகில் உள்ள மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் பாலியல் பலாத்காரம் செய்த விட்டு, இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
இரு காவலர்களும் டிஸ்மிஸ் :-
இது குறித்து சம்பவம் அறிந்த, அப்பகுதி கிராம மக்கள் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இதுகுறிதது மருத்துவர்கள் மூலம் காவல் துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட, சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் கைது செய்ததுடன், நிரந்தர பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்றம் கண்டனம்:-
இதுகுறித்த விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது, “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என இந்தாண்டு ஜனவரியில் தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
திருவண்ணாமலை இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கில் காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரையும் அரசமைப்புச் சட்டம் சட்டக்கூறு 311ன் அடிப்படையில் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பது வரவரவேற்கத்தக்கது என்றார்.
மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் காவல்துறையினர் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்கிற பெருமையைத் தமிழகம் தக்க வைத்துக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

