ஷாக்… சசிகுமார் பட நடிகைக்கு செருப்படி!

நடிகர் சசிகுமாருடன் கென்னடி கிளப் படத்தில் நடித்த நடிகை மீனாட்சி கோவிந்தராஜனுக்கு செருப்படி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன்- மீனாட்சி தொடரில் நடித்தவர் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு சசிகுமார் நடித்த கென்னடி கிளப் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதன்பின் வேலன், டிமாண்டி காலனி 2, கோப்ரா, 2கே லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் டிமாண்டி காலனி 3, காதலே காதலே, வந்தான் சுட்டான் ரிபீட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை மதுரவாயலில் குடும்பத்தாருடன் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வசித்து வருகிறார். இவரது தாயை ஜேம்ஸ் என்பவர் வீடு புகுந்து செருப்பால் அடித்துள்ளார். இதனால் பதறிப்போன நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் அதை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜேம்ஸ், தடுத்த நடிகை மீனாட்சி கோவிந்தராஜனையும் அடித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி கோவிந்தராஜனின் தாய்  செருப்பால் அடித்ததால் ஜேம்ஸ் பழிவாங்க செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஜேம்ஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *