பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகம் 4வது இடம் பிடித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் :-
முந்திக்காலம் இல்லாமல் தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். பணியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் உள்ளனர். அரசுத்துறை மட்டும் இல்லாமல்; தனியார் துறை; பொதுப்பணித்துறை என பல துறை நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றிக்கொண்டு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பொறியாளராக, மருத்துவராக, ஆராய்ச்சியாளராக தொழில்நுட்ப வல்லுநராக என பல திறமையான வேலைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
பாலியல் தொல்லைகள்:-
ஆனால், பெண்கள் அனைத்து துறைகளில் வந்து விட்டாலும், அவர்களுக்கு பாலியல் ரீதியான, மனரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
குற்றங்களை தடுக்க:-
பெண்கள் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இருப்பினும் பாலியல் குற்றங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் வருகின்றது.
பாதுகாப்பான மாநிலங்கள்- நடத்தப்பட்ட ஆய்வுகள்:-
இந்நிலையில், “இந்தியா ஸ்கில்ஸ்” என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை “உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ்” என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
டாப் 10 மாநிலங்கள்:-
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மற்றும் விரும்ப கூடிய டாப் 10 இந்திய மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
