வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே அரசு பேருந்தில் பட்டாசு வெடித்த பள்ளி மாணவர்களை நடத்துனர் காவல்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் சிலர் படியில் தொங்கியபடி அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பேருந்தில் பட்டாசுகள் வெடித்த மாணவர்கள் :-
இதனால் பள்ளி மாணவர்களுக்கும், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் இடையே வாய் வார்த்தைகளில் தகராறு நடந்ததாக தெரிகிறது. அப்போது பள்ளி மாணவர்களில் சிலர் ஓடும் பேருந்தில் பட்டாசுகள் வெடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிடவே! பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் அருகில் உள்ள வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி நடத்தவற்றை கூறி, பள்ளி மாணவர்களை காவல்துறையை வசம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினரோ! பள்ளி மாணவர்களை எச்சரித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
