புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” மகளிர் உரிமைத்தொகையாக இதுவரை 30ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக அளவிர் மகளிர் பயனடைய வேண்டும் என்று கருதி நிபந்தனைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தியதால் புதியதாக பல மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றனர். மகளிர் உரிமைத் தொகை கோரி புதிதாக இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பரிசீலனை செய்யப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும்” என்றார்.
