தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், இன்னு ம் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 15) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 18 மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
