குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குண்டுவீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் சமீபகாலமாக சில பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மாதம் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டை வீசி அந்த பேரூராட்சி தலைவரை கொலை செய்ய முற்பட்டனர். அரசு அலுவலகத்தை கடந்து நேற்று நெல்லையில் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வச்சு சம்பவம் நடந்தது மக்களிடத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி மக்களுக்கு தமிழகத்தில் போதிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை காட்டியுள்ளது.

நேற்று நெல்லை மாநகரப் பகுதியில் தச்சநல்லூர் காவல் நிலையத்தின் மீது மாலை நேரத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். அது காவல் நிலையத்தின் மேல் படாமல் சுற்றுச் சுவரின் அருகே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது. இதை தொடர்ந்து அதே கும்பல் தச்சநல்லூர் கரை இருப்பு பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியின் மீதும் ஒரு பெட்ரோல் குண்டை வீசி உள்ளது. பின்னர் பழைய புத்தூர் அருகே உள்ள தென்கலம் விளக்கு சாலைப் பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியது அப்போது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறியுள்ளன. அதிர்ஷ்டவசமாக மூன்று இடங்களிலும் பெட்ரோல் குண்டுகளால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த பெட்ரோல் குண்டு வீசியது யார் அதற்கு காரணம் என்ன என்பதை காவல்துறை தெரிவித்த தகவலில் இருந்து பார்க்கும்போது, காட்டுப் பகுதியில் மது அருந்திய இரண்டு நபர்களை கைது செய்ததற்காக அவர்களின் கூட்டாளிகள் காவல் அலுவலர்களை பழிவாங்கும் எண்ணத்தில் இந்த பெட்ரோல் குண்டை வீசி இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை நடத்தியுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. சாவடியின் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற காவல் துறையின் காவல் நிலையங்கள் மீதும். சோதனைச் மீதும் காவல்துறையை பழிவாங்கும் மற்றும் அச்சுறுத்தும் நோக்கத்தில் நடத்தியுள்ள இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் சவாலை ஏற்படுத்துவதாக உள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் நடந்து வருகின்ற பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக காவல்துறை உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், முயற்சிகளுக்கான காரணமானவர்கள் அதற்கான பின்புலமானவர்கள் ஆகியவர்களை கண்டு அறிந்து அவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து மீண்டும் இதே போன்ற செயல்களை செய்யாத வண்ணம் அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சட்டத்தின் மூலம் பெற்று தர வேண்டும். இவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கொண்டு பெட்ரோல் குண்டுகளை கையாள நினைப்பவர்களுக்கு மிகுந்த ஒரு எச்சரிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் உளவுத்துறை மற்றும் காவல் துறையினர் ஆங்காங்கே இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொடர்பு உள்ள குற்றவாளிகள் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் அமைதி நிலவுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். காவல் துறையின் தலைவர் அவர்கள் உடனடியாக இந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கவனம் செ செலுத்தி தமிழகத்தில் இந் இந்த கலாச்சாரத்திற்கு இத்துடன் ஒரு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *