திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (செப்.9) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றனர். இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், திமுகவின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.