தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரசாரத்திலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. தேர்தலுக்காக பூத் கமிட்டி மாநாடுகளை பாஜக நடத்தி வருகிறது. அத்துடன் அடுத்த வாரம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி நடைபெறும் கூட்டங்களில் கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக பாஜகவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணைத்தலைவர் பைஜெயந்த் பாண்டா, இணை தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோரை நியமித்து பாஜ தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் உத்தரவிட்டுள்ளார்.