11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி பொதுத்தேர்வு இல்லை…
நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
தமிழ்நாடு அரசின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கெனவே 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், 2030ஆம் ஆண்டு வரை அரியர் தேர்வுகள் (மறுத்ரே்வுகள்) எழுதிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் பழைய நடைமுறை தான்
மேலும், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் (2025 – 26) 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே மீண்டும் பின்பற்றப்படும் எனவும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
