முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலைமையில் தீவிர சோதனை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்களும், போலீஸாரும் இணைந்து அணைப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.
ஆனால், தீவிர சோதனைக்குப் பிறகு அணையில் சந்தேகத்துக்கு இடமான எந்த பொருளும் கிடைக்கவில்லை என்று தெரிய வந்தது. எனினும், அணைப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
