சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நக்சலைட்டுகள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜக்தல்பூரில் 208 நக்சலைட்டுகள் இன்று போலீஸாரிடம் சரணடைந்தனர். அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
இந்த பகுதியில் ஒரே நேரத்தில் இவ்வளவு நக்சலைட்டுகள், ஆயுதங்களுடன் சரணடைந்தது முதல் முறை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம், சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை, பாதுகாப்பு படை வீரர்களின் துணிச்சல் மற்றும் வளர்ச்சி பணிகள் விளைவாக இந்த சரண் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கரின் வடக்கு பஸ்தார் பகுதியில் உள்ள அபுஜ்மர் வனப்பகுதியில் 170 நக்சலைட்டுகள் சமீபத்தில் சரணடைந்தனர். இதனால் இப்பகுதியை நக்சலைட்டுகள் இல்லாத பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
