ஒரே நாளில் அதிரடியாய் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 30) சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியின் மீது முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்வதால் அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 29) திடீரென ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்தது. இதனால் ஒரு சவரன் 1,04,160 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 281 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் சரிந்து, ஒரு கிலோ 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 30) சவரனுக்கு 3,360 ரூபாய்ந்து சரிந்து ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 258 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு 23 ஆயரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 58 ஆயிரத்து விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *