தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலை கிடுகிடு உயர்வு!

தங்கத்திற்குப் போட்டியாக வரலாறு காணாத வகையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 17) வெள்ளி விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 11 ரூபாய் உயர்ந்து 222 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 11,000 ரூபாய் உயர்ந்து 2,22,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ளி விலை கிடு கிடுவென உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதே போல சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 50 ரூபாய் உயர்ந்து 12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 99,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 18 காரட் ஆபரணத்தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 10,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *