ஒரத்தநாடு அருகே திருவையாறு திமுக எம்எல்ஏ சந்திரசேகரனின் கார் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). விவசாயியான இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், வயலுக்கு அவர் சென்ற போது, ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான சந்திரசேகரனின் கார், கோவிந்தராஜ் சென்ற பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸார் விரைந்து சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திமுக எம்எல்ஏ சந்திரசேகரன் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
