கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 97,440 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
ஏழை, எளிய மக்களின் கனவாக தங்கம் மாறியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு நாளும் ஏறும் அதன் விலை மலைக்க வைக்கிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கறைந்தது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, தீபாவளியான நேற்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 11,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று கிராமுக்கு 260 ரூபாய் அதிகரித்து,12,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, .95,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால்,, இன்று 2,080 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 97,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன்.1 லட்ச ரூபாயை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.
